ஊடகத்துறையில் பலகோணங்கள் இருந்தாலும் புதிய நிகழ்சிகளை உருவாக்குவதில் எனக்குள் இருக்கும் ஆசையினை பரீட்ச்சித்து பாப்பதற்காக உருவாகியதே "Quiz T20” Reality Game Show(Infotainment Game Show). பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபல்யமாக இன்று பேசப்படும் ஒரு நிகழ்ச்சியாக மாறியுள்ளது என்றால் அதனை அன்று உருவாகும்போதே இதனை கனவு கண்டுள்ளேன் என்பது தான் உண்மை. இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெறுமனமே தென் இந்திய நிகழ்ச்சிகளின் பிரதிகளாய் இருப்பதால் அதனுடைய வெற்றி மற்றும் தனித்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கும் காலம் இது. இலங்கையில் பெரும்பாலான தமிழ் பேசும் மக்களின் விருப்பத்துக்கு உரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக தென் இந்திய நிகழ்ச்சிகள் காணப்படுகின்றது. ஏனெனில் அந் நிகழ்ச்சிகள் புதுமையனவைகளாகவும் பார்ப்பதற்ற்கு உகந்ததாகவும் காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் விளம்பர அனுசரனைகளின் அளவினால் இந்த நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாகவும் வர்த்தக அடிப்படையிலும் உருவாக்கமுடியும். இதுதான் இலங்கையில் உள்ள படைப்பாளிகளின் கவலையும் ஏமற்றமுமாகும்.
பொதுவாக பெரும்பாலான தமிழ் பேசும் மக்கள் தென் இந்திய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் அலைவரிசைகளை மாத்திரம் டிவி ரிமோட் கட்டுப்படுத்தியில் தேடும் நிலைமை மாத்திரம் தான் பல ஆண்டுகளாக காணப்படுகின்றது . இது அவர்களின் குற்றம் அல்ல, இலங்கையில் உள்ள படைப்பாளிகளின் சாணக்கிய நோக்கற்ற நிகழ்ச்சிப்படைப்புகளினால் ஏற்பட்ட நிலை தான் இது. இலங்கையில் பெரும்பாலான தமிழ் பேசும் மக்கள் கல்விக்கு முக்கியம் கொடுப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிப்படைப்புகளின் பார்வையாளர்கள் வட்டம் பாடசாலை மாணவர்கள் சார்ந்து இருந்தால் அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் ஆர்வம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் என்பது எனது எண்ணமாக இருந்தது. இதற்காக பாடசாலை மாணவர்கள் சார்ந்த தென் இந்திய நிகழ்சிகளை அவ்வாறே பிரதி செய்து ஒளிபரப்பினால் போதும் என்று நினைப்பவர்களும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் . இம் முயற்ச்சியானது முழுமையான வெற்றியினை தரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய நிலைமை இவ்வாறு பிரதி செய்வதால் உருவாகின்றது. இதற்குப்பதிலாக சற்று ஆழமாக சிந்தித்து புதிய நிகழ்சிகளை பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கினால் அந் நிகழ்ச்சிகள் இலங்கையில் பெரும்பாலான தமிழ் பேசும் மக்களின் விருப்பத்துக்கு உரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக மாறும் என்பது திண்ணம்.
அந்த அடிப்படையில் உருவானது தான் "Quiz T20” Reality Game Show, இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் Cricket விளையாட்டு மிகப்பிரபல்யமானது அதுபோல் Quiz போட்டிகள் மாணவர்களின் அறிவுப்பசியை தூண்டக்கூடியது. Quiz போட்டிகளை வெறுமனமே தொலைக்காட்சி நிகழ்ச்சிப்படைப்புகளாக உருவாக்கினால் அதற்கு அவ்வளவு வரவேற்ப்பு கிடைக்காது அது போல் உள்ளூர் Cricket விளையாட்டினை ஒளிபரப்பினாலும் அதற்குரிய வரவேற்ப்பும் மந்தமாகவே மக்கள் மத்தியில் காணப்படும். ஆனால் Cricket மற்றும் Quiz ல் இருக்கக்கூடிய பொது இயல்புகளை ஒன்றிணைத்து ஒரு நிகழ்ச்சியினை உருவாக்கினால் அது மாணவர்கள் மத்தியில் பிரபல்யமாகி பின் பெற்றோர்களையும் பார்க்கத்தூண்டி ஒரு குடும்பமாக ரசித்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக மாறும் என்று திட்டமிட்டிருந்தேன். அதன்படியே இன்று Quiz T20 ஒரு குடும்பமாக பார்த்து ரசிக்கக்கூடிய நிகழ்ச்சியாக மாறியுள்ளது . அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு அமோக ஆதரவினை தந்து வரும் அனைவருக்கும் எமது நன்றிகள். நீங்கள் இந் நிகழ்ச்சிக்கு கொடுக்கும் அமோக ஆதரவு எம்மை மேலும் பல புதிய நிகழ்சிகளை உருவாக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
வெறுமனமே ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இல்லாது சர்வதேச தரத்துக்கு உருவாக்கவேண்டும் என்றால் பெரும் முதலினை வாரி இறைக்க வேண்டும் . ஆனால் அது ஒரு புத்திசாதுரித்தன்மான முயற்ச்சியாக இருக்கமுடியாது என்று நம்பினோம். ஆனாலும் உலகளாவிய ரீதியில் பரப்பியுள்ள தமிழ் பேசும் சொந்தங்கள் நம்மவரினால் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி என்று பெருமை படவேண்டும் என்றால் எதாவது சர்வதேச தரத்துக்கு புதுமை புகுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது. அதன் வெளிப்பாடே Media தொழில்நுட்ப்பதில் 4th Alternative ஆக நான் கருதும் Digital Media தொழில்நுட்ப்பதினை இயன்றளவு பூரணமாக பயன்படுத்துகிறேன் இந் நிகழ்ச்சியில். இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரலாற்றில் ஒரு Reality Game Show ல் பூரணமாக Digital Media தொழில்நுட்ப்பதினை பயன்படுத்துவது இதுவே முதற்தடவை ஆகும்.
நாம் நம்புகிறோம் இலங்கையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் Quiz T20 மட்டும்தான் You Tube இனுடாக பிரத்தியேக அலைவரிசை ஒன்றினை வெற்றிகரகமாக கொண்டுள்ளது என்று. இந்த அலைவரிசையினூடாக Quiz T20 இன் அனைத்து ஒளிபரப்பாகிய பகுதிகளும் தரவேற்றப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியினை உலகளாவிய ரீதியில் எடுத்து செல்வதிற்கு
இந்த பிரத்தியேக You Tube அலைவரிசை சிறப்பாக பயன்படுகின்றது.
Quiz T20 Facebook,Quiz T20 You Tube Chanel
ஊடகத்துறையில் பலகோணங்கள் இருந்தாலும் புதிய நிகழ்சிகளை உருவாக்குவதில் எனக்குள் இருக்கும் ஆசையினை பரீட்ச்சித்து பாப்பதற்காக உருவாகியதே "Quiz T20” Reality Game Show(Infotainment Game Show). பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபல்யமாக இன்று பேசப்படும் ஒரு நிகழ்ச்சியாக மாறியுள்ளது என்றால் அதனை அன்று உருவாகும்போதே இதனை கனவு கண்டுள்ளேன் என்பது தான் உண்மை. இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெறுமனமே தென் இந்திய நிகழ்ச்சிகளின் பிரதிகளாய் இருப்பதால் அதனுடைய வெற்றி மற்றும் தனித்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கும் காலம் இது. இலங்கையில் பெரும்பாலான தமிழ் பேசும் மக்களின் விருப்பத்துக்கு உரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக தென் இந்திய நிகழ்ச்சிகள் காணப்படுகின்றது. ஏனெனில் அந் நிகழ்ச்சிகள் புதுமையனவைகளாகவும் பார்ப்பதற்ற்கு உகந்ததாகவும் காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் விளம்பர அனுசரனைகளின் அளவினால் இந்த நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாகவும் வர்த்தக அடிப்படையிலும் உருவாக்கமுடியும். இதுதான் இலங்கையில் உள்ள படைப்பாளிகளின் கவலையும் ஏமற்றமுமாகும்.

ஹாய் உங்கள் நிகழ்ச்சி சிறந்தது... இது பாடசாலை மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.. இந்த நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களிற்கு மட்டும் தானா?
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
ReplyDeleteநிச்சியமாக வருங்காலத்தில் மாற்றங்களை எதிர் பாக்கலாம் மாற்றம் ஒன்றே மாறாதது..
VJ