Enjoying while writing Quiz T20 Lyrics QUIZ T20 க்கான பிரத்தியேக பாடலுக்கான வரிகளை உங்கள் ரசனைக்காக எனது எண்ணகளில் தோன்றிய வண்ணகளை வரிகளாக செதுக்கியுள்ளேன் ஷமிலின் இசையிலும் கம்பீரக்குரளிலும் எனது எழுத்துருவம் இசை வடிவம் பெற்றுள்ளது. ஒரு பரீட்சார்த்த முயற்சியாக பாட்டெழுதும் பணியிலும் உங்களுடன் கலந்துகொள்கிறேன். இந்த பணிக்கான பரீட்சை முடிவுகள் உங்களுடைய ஆதரவின் தங்கியுள்ளது. கருத்துக்களும் விமர்சனகளும் எதிர்பாட்கப்படுகின்றன. இதனை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். QUIZ T20 முகப்புத்தக பக்கம் எனது முகப்புத்தக பக்கம்
ஊ டகத்துறையில் பலகோணங்கள் இருந்தாலும் புதிய நிகழ்சிகளை உருவாக்குவதில் எனக்குள் இருக்கும் ஆசையினை பரீ ட் ச்சித்து பாப்பதற்காக உருவாகியதே "Quiz T20” Reality Game Show( Infotainment Game Show) . பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபல்யமாக இன்று பேசப்படும் ஒரு நிகழ்ச்சியாக மாறியு ள்ளது என்றால் அதனை அன்று உருவாகும்போதே இதனை கனவு கண்டுள்ளேன் என்பது தான் உண்மை. இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெறுமனமே தென் இந்திய நிகழ்ச்சிகளின் பிரதிகளாய் இருப்பதால் அதனுடைய வெற்றி மற்றும் தனித்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கும் காலம் இது. இலங்கையில் பெரும்பாலான தமிழ் பேசும் மக்களின் விருப்பத்துக்கு உரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக தென் இந்திய நிகழ்ச்சிகள் காணப்படுகின்றது. ஏனெனில் அந் நிகழ்ச்சிகள் புதுமையனவைகளாகவும் பார்ப்பதற்ற்கு உகந்ததாகவும் காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் விளம்பர அனுசரனைகளின் அளவினால் இந்த நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாகவும் வர்த்தக அடிப்படையிலும் உருவாக்கமுடியும். இதுதான் இலங்கையில் உள்ள படைப்பாளிகளின் கவலையும் ஏமற்றமுமாகும். பொதுவாக ...